'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டுக்கும் சென்றார். அந்தப்படம் ஹிட் அடையவே பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்பு குறைய பின்தங்கினார். இந்நிலையில் ஆல் இஸ் வெல் என்ற படத்தில் அசின் நடிக்க இருந்தார். இப்படம் ஆரம்பமாக இருந்த நிலையில், அசினின் உடல் எடை பெருத்துவிட்டதால் அவர் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வௌியானது. ஆனால் அந்த தகவல் இப்போது பொய்யாகியுள்ளது. விரைவில் நடிகை அசின், ஆல் இஸ் வெல் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். உமேஷ் சுக்லா இயக்கும் இப்படத்தில் அபிஷேக் ஜோடியாக அசின் நடிக்க இருக்கிறார். தற்போது மும்பையில் நடந்து வரும் ஷூட்டிங் தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடைபெற இருக்கிறது. அதனையடுத்து நடக்க இருக்கும் ஷூட்டிங்கில் அசின் பங்கேற்க உள்ளார். ஜூலை மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.