மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கழுகு படத்திற்கு பிறகு சூடு பிடித்த பிந்து மாதவியின் மார்க்கெட் தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. தற்போது, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கலக்குறே மாப்ளே, சவாலே சமாளி என சில படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறார் என்றபோதும, எந்த படத்தின மீதும் அவருக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை.
அதனால் இந்த படங்களை நம்பிக்கொண்டு கோடம்பாக்கததில் முகாம் போட விரும்பாத பிந்துமாதவி, தற்போது ஐதராபாத்துக்கு ரிட்டனாகி விட்டார். தனது தாய்மொழி தெலுங்கு என்பதோடு அங்கு ஆரம்ப காலத்தில் பல படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து ஆந்திர ரசிகர்களை கல்க்கியவர்தான் பிந்து. அதனால், விட்ட இடத்தை மீண்டும் தொடரும நோக்கத்துடன் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறர்ர.
அதேசமயம், தமிழில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்திற்கு ஏற்கனவே கமிட்டாகியிருக்கும் பிந்துமாதவி, அவரது இயக்கத்தில் முன்பு நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்காவைப் போன்று புதிய படமும் தனக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதனால், அந்த படத்துக்காக நீங்கள் எப்போது அழைத்தாலும் நான் வந்து விடுவேன. கால்சீட் பிரச்னைக்கு வழிவைக்க மாட்டேன் என்று அவரிடம் உறுதி அளித்து விட்டு சென்றுள்ளாராம் பிந்து மாதவி.