'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் சில நடிகைகளில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடத்தக்கவர். நான் இப்படி மட்டும்தான் நடிப்பேன் என்று எந்தவித சட்டதிட்டமும் போடாமல் கதைகளுக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து நடிப்பேன் என்று துணிச்சலாக நடித்து வருபவர். அந்த துணிச்சலே அவரை குறுகிய காலத்தல் பேசப்படும் நடிகையாகி விட்டது.
குறிப்பாக, பாலிவுட், டோலிவுட்டின் முன்னணி ஹீரோயினிகளுக்கு பெரிய போட்டி நடிகையாக உருவெடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என்ற மூன்று மொழியிலுமே மார்க்கெட்டில் இருககும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம், தனது வயதுக்கு பொருந்தாத நடிகர்களுடன் அவர் ஜோடி சேருவதில்லை.
அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஸ்ருதியை அணுகியபோது, அவர்தான் ஹீரோ என்று சொன்னதுமே எனக்கு அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லி விட்டாராம். காரணம் கேட்டவர்களிடம், அவர் ரொம்ப சீனியர் நடிகர். நான் வளர்ந்து வரும் நடிகை. நான் அவருடன் நடித்தால் அது மேட்சாக இருக்காது என்பதோடு, எனது வளர்ச்சிக்கும் தடையாகி விடக்கூடும் என்று கூறி விட்டாராம் ஸ்ருதிஹாசன்.
Tags- shruthihasan. venkatesh. india cinema. tamil. telugu.hindi.
ஸ்ருதிஹாசன், வெங்கடேஷ், இநதிய சினிமா, தமிழ், தெலுங்கு, இந்தி.