Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் பட விழாவுக்கு ரஜினி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை - தனுஷ்

21 ஜன, 2015 - 18:23 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ரஜினிகாந்ந்தின் மூத்த மருமகன் தனுஷ் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்று எங்கும் காட்டி கொண்டதில்லை. சினிமாவில் தனக்கு ஒரு பாணியை உருவாக்கி உயர பறந்து கொண்டிருக்கிறார்.


தமிழ் சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த தனுஷ், கொலவெறி பாடல் மூலமாக உலகம் முழுக்க பிரபலமானார். அதன்வௌிப்பாடாக பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து, ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து பாலிவுட்டில் தனது இரண்டாவது படமாக ஷமிதாப் என்ற படத்தில் நடித்துள்ளார்.


பால்கி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷூடன் அமிதாப் பச்சன், அக்ஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வௌியீட்டு விழா மும்பையில் நடந்தது. அத்துடன், இப்படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தற்காக பாராட்டு விழாவும் நடந்தது. இதில் அமிதாப் உடன் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.


விழாவில் தனுஷ் பேசுகையில், இந்த விழாவிற்கு வந்ததற்காக ரஜினி சாருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஷமிதாப் படத்திற்கு நான் ஒப்பந்தமானபோது எனக்கு தெரியாது, இந்தமாதிரி விழா எல்லாம் நடக்கும், ரஜினி எல்லாம் வருவார் என்று... என் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்துள்ளது, அதை எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in