மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகர் அவதாரம் எடுத்து இரண்டு படங்களில் நடித்து விட்டார். நான், சலீம் படங்களில் அவர் சீரியசான படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். புதுமுகம் என்.ஆனந்த் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் முதன் முறையாக விஜய் ஆண்டனி ரொம்பவே ஜாலியாக, காமெடியாக நடிக்கிறார். குறிப்பாக முதன் முறையாக ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். புதுமுக இசை அமைப்பாளர் தீனா தேவராஜன் இசையில் உருவாகி உள்ள இந்தப் பாடல் நேற்று (ஜன 20) யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.
"ஒரு பொண்ண பார்த்தேன் மாமா
என்னை கொண்ணுபுட்டா மாமா
அவ கண்ணுக்குள்ள கன்ன வச்சு சுட்டுப்புட்டா மாமா
ஹோம்லி லுக்கு மாமா
அவ பேமிலி பொண்ணு மாமா..."
என்ற அந்தப் பாடலில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலந்திருந்தாலும் கேட்டபதற்கு இனிமையாக இருக்கிறது. கொய்யால என்ற வார்த்தையை பெண்கள் கோரசாக இடையிடையே பாடுகிறார்கள்.