Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லோருமே உலக நாயகர்கள் தான்: கமல்

21 ஜன, 2015 - 12:35 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன், உலகநாயகன் டியூப் என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு கேள்வி பதில் பகுதியை தொடங்கியிருக்கிறார். இதில் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்பவர்கள் கேட்கலாம். அதற்கு கமல் பதில் அளிப்பார். இதுகுறித்து கமல் வெளியிட்டிருக்கும் வீடியோ அறிக்கை வருமாறு...


உலக நாயகன் டியூப் என்று கமல்ஹாசன் பெயர் வைத்திருக்க மாட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். நான் என்றைக்குமே என்னை உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. என்னை பொருத்தவரை எல்லோருமே உலக நாயகன்தான். என் பட வசனங்களிலேயே அது தெரியும். அதனால் இந்த தலைப்பு பொருத்தமாகத்தான் இருக்கும்.


நம்முடைய கேள்வியை இவர் படிப்பாரா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். முழுசா படிச்சிடுவேன்னு பொய் சொல்ல மாட்டேன். முக்கால்வாசி படித்து விடுவேன். கமல்ஹாசனை கடுமையாக விமர்சிப்பவனும், அன்பாக நேசிப்பவனும் நான்தான். எனவே என்னை விமர்சிக்கும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிப்பேன். விமர்சனத்துக்காக கோபப்பட மாட்டேன். அது சரியான விமர்சனமாக இருந்தால் எனது நடவடிக்கையில் அதனை திருத்திக் கொள்வேன்.


கடுமையான விமர்சனங்களுக்கு பதிலாக எனது செயல் இருக்கும். நான் சொன்ன உடன் கமல் மாற்றிக் கொண்டார். திருத்திக் கொண்டார் என்று யாராவது பெருமைபட்டுக் கொண்டால் அதுபற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். எனது வழி சீராவதுதான் எனக்கு முக்கியம்.


எல்லா கேள்விக்கும் நானே பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது எனது மற்ற வேலைகளை தடுப்பதாகும். அதற்காக மற்றவர்களை வைத்து பதில் எழுத மாட்டேன். கோவில் பூசாரிகளையே ஒத்துக் கொள்ளாதவன் எனக்கொரு பூசாரியை வைத்துக் கொள்வேனா. உங்கள் கேள்விக்கான பதில் எனது பிற பேச்சுகளிலோ, செயல்களிலோ நிச்சயம் இருக்கும். ஒரு நாள் உட்கார்ந்து எல்லா கேள்விக்கும் ஒரே பதிலையும் சொல்வேன்.


இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in