ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வட இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் வட இந்திய அரசியல்வாதிகள் வணக்கம் என்று தமிழில் ஒற்றை வார்த்தை பேசினாலே தமிழக மக்கள் உச்சிகுளிர்ந்து போய்விடுவார்கள். அண்மையில் பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பான நேர்காணலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தமிழில் பேசியதைக்கேட்டு தமிழ்நாட்டு மக்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள்.
ராஜபக்ஷேவின் தமிழ்ப்பேச்சைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்பேசப்போவதாக தகவல்! தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களாக ஏற்று ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார் அமிதாப். அவரை வைத்து சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கிய பால்கி தற்போது ஷமிதாப் என் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்திலும் அமிதாப்தான் ஹீரோ. இன்னொரு ஹீரோவாக தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தனுஷ், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் போன்ற நம்மூர் பிரபலங்கள் பலரும் ஷமிதாப் படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தை தமிழ்நாட்டில் பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஷமிதாப் படத்தின் புரமோஷனுக்காக விரைவில் சென்னை வரவிருக்கிறார் அமிதாப் பச்சன். சென்னை வரும் அமிதாப் பச்சன் சத்யபாமா பல்கலைகழக மாணவர்களுடன் உரையாட உள்ளார்.
தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில், அவர்களுடன் தமிழில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் அமிதாப். முழுக்க தமிழில் உரையாட முடியாவிட்டாலும் சில முக்கியமான விஷயங்களை தமிழில் பேசுவதற்கு விரும்பி, தற்போது தீவிரமாக கற்றுக் கொண்டிருக்கிறாராம் அமிதாப்.