'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரசிடெண்ட் குரூப் ஓட்டல் நிறுவனங்களின் தலைவர் அபூபக்கர், ஹமீதா பானு தம்பதிகளின் மகள் அஸ்லினா யாஷ்மினுக்கும், மலேசிய தொழிலதிபர் மகன் முகமது இம்ரானுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சிகள் அத்தனையிலும் கலந்து கொண்டு வாழ்த்திச் சென்றார்.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங், ஆற்காடு இளவரசர், ஹஜ் கமிட்டி தலைவர் குவைஷார்ஷமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ஷாநவாஸ் உசேன், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசன், கன்னட நடிகரும், கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.