தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொங்கலுக்கு “ஐ, ஆம்பள, டார்லிங், ஆய்வுக் கூடம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ஆய்வுக்கூடம்' படம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களை சரியாகச் சென்றடைந்து பொங்கல் விடுமுறை தினத்தில் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பொங்கலுக்கு எந்தெந்த படம் வருகிறது என்று தனக்குத் தெரியாது என நேற்று விஷால் தெரிவித்து மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
'ஆம்பள' திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஷால், “என்னுடைய 'ஆம்பள' திரைப்படத்தை பொங்கலுக்கு கண்டிப்பாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று ராப்பகலாக உழைத்தோம். ஆனால், படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஆர்யா, “எவனா இருந்தாலும் வெட்டுவேன்” என நான் சொன்னதாகச் சொன்னார். அது முற்றிலும் கற்பனையான ஒரு விஷயம். பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் வெளிவருகிறது என்று எனக்குத் தெரியாது. நான் அப்படி சொல்லவே இல்லை.
அதே போலத்தான் இதற்கு முன் நடைபெற்ற ஒரு விழாவிலும் விஷ்ணு விஷால், எனக்கும் லட்சுமி மேனனுக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசி விட்டார். அதை சமாளிக்கவே எனக்கு ரொம்ப நாளாயிற்று. இனி, என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் எனது நண்பர்களை இனி அப்படிப்பட்ட விழாக்களுக்கு நான் அழைக்க மாட்டேன்,” என்று பேசினார்.
விஷால் பேசியதை ஒரு நடிகராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டு, பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் வருகிறது என்பது எனக்குத் தெரியாது என்று பேசியது நம்பும்படியாக இல்லை. வியாபாரப் பேச்சுக்களில் ஈடுபடும் போது கூட எத்தனையோ பேர் எந்தெந்த படங்கள் வருகிறது என்று சொல்லியிருப்பார்கள். அப்படியே இல்லையென்றாலும் தினமும் பேப்பரைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளலாம். அதையும் மீறி, ஆர்யா தன்னைப் பற்றி பொய் சொன்னதாக சொன்ன விஷாலே, பொங்கல் படங்களைப் பற்றித் தெரியாது என்று சொல்வதும் பொய்யாகத்தானே இருக்க முடியும்.