Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உழைப்புக்கு கிடைத்த பலன் : டைரக்டர் பாண்டிராஜ் பெருமிதம்

15 செப், 2010 - 16:54 IST
எழுத்தின் அளவு:

முழுக்க முழுக்க கு‌ழந்தைகளையும், குழந்தைகளின் நட்பு, சண்டை, பாசத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பசங்க படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைந்துள்ளன. இந்த விருது மகிழ்ச்சியை கொண்டாடி வரும் டைரக்டர் பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில், ``எனக்கு தேசிய விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என்னோட எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு வசனம் எழுத ரொம்பவே நேரம் எடுத்துக் கொண்டேன். யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

பசங்க படத்தை தயாரித்த சசிகுமார் கூறுகையில், `பசங்க படத்துக்கு சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. பசங்க படம் திரைக்கு வந்தபோதே நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அந்த வாழ்த்துகள் இப்போது பலித்திருக்கிறது. இப்படியொரு பெருமை கிடைப்பதற்கு ரசிகர்கள் மற்றும்  டைரக்டர் பாண்டிராஜ், படத்தில்  நடித்த மற்ற நடிகர்-நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்தான் காரணம். அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

chander - chennai,இந்தியா
30 அக், 2010 - 10:42 Report Abuse
 chander சசிகுமார் உங்களை நம்பி நல்ல தமிழ் சினிமா உள்ளது ....தமிழ் சினிமா வை காப்பற்றுங்கள்..
Rate this:
சந்திரன் - New Delhi,இந்தியா
18 செப், 2010 - 11:33 Report Abuse
 சந்திரன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு படைத்தவர் வாழ்க ... வாழ்த்துக்கள்
Rate this:
AARTHI - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 செப், 2010 - 18:56 Report Abuse
 AARTHI "தமிழன் எப்பவும் நல்லதுக்கு வாழ்த்து தெரிவிக்கிர ஒரு நல்ல குணமும் ‌கெட்ட விசயங்களுக்கு எதிர்ப்ப தெரிவிக்கிற குணமும் கொண்ட உன்னதமானவன். தமிழன் சார்பா என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பசங்கள் movie டீம் கு.
Rate this:
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
17 செப், 2010 - 07:17 Report Abuse
 C Suresh Unbelievable!! Pandyarajan started his career very good with nice, entertaining and funny movies. Then it become more vulgar and I stopped watching his movies. Happy to hear his movie is hit and the subject is about kids and unconventional. Wish he takes more movies that we can watch with family.
Rate this:
S.Kumar - Singapore,இந்தியா
17 செப், 2010 - 05:52 Report Abuse
 S.Kumar புதுக்கோட்டை விரசிலையை சேர்ந்த பாண்டியராஜ். என் ஊர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி ”
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in