அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'ஐ' திரைப்படம் கேரளாவில் மொத்தம் 230க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களாக 'ஐ' திரைப்படம் பல ஊர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதுவரை சுமார் 10 கோடிக்கும் மேல் படம் வசூலை அள்ளியிருக்கும் என்கிறார்கள். ஒரு தமிழ்ப் படம் வெறும் ஐந்து நாட்களிலேயே இந்த அளவிற்கு வசூலை அள்ளியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இப்படத்தை குளோபல் யுனைட்டெட் மீடியா என்ற ஒரு புதிய நிறுவனம் சுமார் 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாம். இப்போது ஐந்து நாட்களுக்குள்ளேயே சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசலை மிஞ்சிய கூடுதல் தொகை வசூலாகியுள்ளதாம். கேரளாவைப் பொறுத்தவரையில் தமிழ்ப் படங்கள் என்றால் அது விஜய் படங்கள்தான் அதிகமாக வசூலிக்கும். அந்த சாதனையையும் சேர்த்து 'ஐ' படம் முறியடித்துள்ளது என்கிறார்கள்.