ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஐ' படம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்களும், விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அனைவரும் ஒட்டு மொத்தமாக விக்ரமின் நடிப்பைப் பற்றி பாராட்டித் தள்ளி வருகின்றனர். ஒரு கதாபாத்திரத்திற்காக ஒரு நடிகர் இந்த அளவிற்குக் கூட தன்னை வருத்திக் கொள்வாரா என பலரையும் அவருடைய உழைப்பு ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் மொத்தம் நான்கு விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கட்டுமஸ்தான உடற்கட்டுடன் 85 கிலோ எடை கொண்ட முதல் தோற்றம். அடுத்தது மாடலிங் செய்வதற்காக மிகவும் ஸ்டைலிஷாக உள்ள தோற்றத்திற்காக 70 கிலோ எடை உள்ள இரண்டாவது தோற்றம். 'ஐ' வைரஸ் உடலில் செலுத்தப்பட்டதால் கூன் விழுந்த விகாரமான தோற்றம் கொண்ட 55 கிலோ எடை கொண்ட மூன்றாவது தோற்றம். ஒரு பாடல் காட்சியில் ஓநாய் மனிதன் உருவத்தில் நடித்ததற்காக 110 கிலோ எடை கொண்ட நான்காவது தோற்றம். இப்படி ஒவ்வொரு தோற்றத்திற்காகவும் உடலை ஏற்றியும், குறைத்தும் நடிப்புக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் விக்ரம். அதிலும் வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்து சுரேஷ் கோபியை சந்திக்கும் காட்சியில் விக்ரமா அது என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டார். 'ஐ' விமர்சனங்கள் படத்தை பாதிக்காத அளவிற்கு விக்ரமின் நடிப்பு அதற்கு சரியான பதிலடி கொடுப்பதாக அமைந்து இன்று 'ஐ' திரைப்படம் உலக அளவில் பாராட்டுக்களிலும், வசூலிலும் சாதனை புரியும் ஒரு தமிழ்ப் படமாக அமைந்து விட்டது.