ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீனிகம், பா படங்களை இயக்கி புகழ்பெற்ற பால்கியின் புதிய படம் ஷமிதாப். ஒரு நடிகருக்கும், அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் ஒரு கலைஞருக்கும் இடையில் நடக்கும் ஈகோ மோதல் கதை. நடிகராக தனுசும், டப்பிங் கலைஞராக அமிதாப்பச்சனும் நடிக்கிறார்கள். இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6ந் தேதி வெளிவருகிறது.
ஷமிதாப் இந்திப் படமாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் அசல் தமிழர்கள், படத்தை இயக்கி உள்ள பால்கி கும்பகோணத்தை சேர்ந்த தமிழர், இசை அமைத்திருப்பவர் நம்ம ஊர் இளையராஜா, ஒளிப்பதிவு செய்திருப்பவர் பி.சி.ஸ்ரீராம், நடித்திருக்கும் தனுஷ் தமிழ் நடிகர், நாயகி அக்ஷரா ஹாசன் கமலஹாசன் மகள். இப்படி தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் ஷமிதாப். தமிழ் மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஷமிதாப் டீம் வருகிற 23ந் தேதி படத்தின் புரமோசனுக்காக சென்னை வருகிறது. அன்றைய தினம் சத்யபாமா பல்கலைகழகத்தில் மீடியாக்களையும், ரசிகர்களையும் சந்திக்கிறார்கள். அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், பால்கி ஆகியோர் இரண்டு நாள் சென்னையில் தங்கியிருந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.