ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமண வதந்தியில் சில வருடங்களாகவே சிக்கிக்கொண்டு வந்த த்ரிஷா, இப்போது தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து விட்டார். அதனால் அவரைப்போலவே 32 வயது நடிகையான அனுஷ்காவும் அடுத்தபடியாக திருமண செய்திகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது ராணி ருத்ரமமா தேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களுக்காக சில வருடங்களாக ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது வெளிநாடுகளுக்கு டூர் சென்றிருக்கிறார். அதில் தனது குடும்பம் மட்டுமின்றி முக்கிய தோழிகளையும் சேர்த்துக்கொண்டு ஜாலி டிரிப் அடித்துள்ளார் அனுஷ்கா.
ஆனால், தான் எந்த புதிய படத்திலும் நடிப்பது பற்றிய செய்தி வெளியிடாததால், இந்த படங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வார் என்று மீணடும் வதந்திகள் கொளுந்து விட்டு எரிந்து விடக்கூடாது என முன்பே உஷாராகி விட்டார் அனுஷ்கா. அதனால், டூர் சென்று வந்ததும் ப்ரஷ்ஷாக அமர்ந்து புதிய படங்களுக்கான கதையை கேட்க இருக்கிறேன். அதன்பிறகே எனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று செய்தி வெளியிட்டிருக்கிறாராம்.