ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று அவரது காதலன் பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்து வருவதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் நயனும், பிரபுவும் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்கவே மறுத்து வந்தனர். இந்நிலையில பிரபுதேவா அதிரடி பேட்டியளித்துள்ளார். அதில் நயனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் பிரபுதேவா கூறுகையில், நான் கஷ்டப்பட்டபோது நயன்தாரா ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள். அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன். நான் நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.
நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்தவொரு காதலனும் காதலியுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை, என்று கூறியுள்ளார்.
நயன்தாரா திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டார் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கும் பிரபுதேவா, தனது மனைவி ரமலத்தையும் காதலித்து அதிரடியாக கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.