தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளையராஜாவின் இசை வாரிசாக வருவார் என்று எதிபார்க்கப்பட்டவர் கார்த்திக் ராஜா. இளையராஜா பின்னணி இசையில் இப்போதும் ராஜாதான். அவர் பாணியில் கார்த்திக் ராஜாவும் பின்னணி இசையில் ஆதிக்கம் செலுத்தினார். ஆரம்ப காலத்தில் பல படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே அமைத்தார். சமீபத்தில் அரண்மணை படத்துக்கு பின்னணி இசை அமைத்தார். ஆனால் கார்த்திக் ராஜாவுக்கு சரியான படங்கள் அமையவில்லை.
அவருக்கு பிறகு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா மளமளவென வெற்றிகளை குவித்து 100 படங்களை தாண்டிவிட்டார். ஆனால் சமீபகாலமாக தனிப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அவரால் ஹிட்டுக்களை கொடுக்க முடியவில்லை. ஒத்துக் கொண்ட படங்களிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்திற்கு இசை அமைத்து வருகிறார் கார்த்திக் ராஜா, சிம்பு, ரம்யா நம்பீசன் பாட இவர் இசை அமைக்க சமீபத்தில் வெளியான அடியே.... மேக்கிங் வீடியோ பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்து வருகிறார். எல்லா பாடல்களுமே நன்றாக வந்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சகாப்தம் படத்தின் ஆடியோ உரிமத்தை லகரி நிறுவனம் 42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது நல்ல அறிகுறியாக தெரிகிறது. தம்பி விட்ட இடத்தை அண்ணன் பிடிப்பாரா என்பது சகாப்தம் வெளியீட்டுக்கு பிறகு தெரியும்.