'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சேட்டை படத்திற்கு பிறகு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி ரீ-என்ட்ரியில் ஜெயம்ரவியின் அப்பாடக்கர், விமலின் மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக ஊதி பெருத்த தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து நடித்து வருகிறார். அதோடு, இரண்டு படங்களிலுமே கிராமத்து கெட்டப்பில் அழகு தேவதையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் அப்பாடக்கரில் இன்னொரு நாயகி த்ரிஷா இருந்தபோதும், மாப்பிள்ளை சிங்கத்தில் ஷோலோ ஹீரோயினியாக நடித்து வருகிறார் அஞ்சலி. ஏற்கனவே விமலுடன் இவர் நடித்த கலகலப்பு படம் ஹிட் அடித்திருப்பதால் அந்த செண்டிமென்ட் இப்போதும் தொடரும் என்று எதிர்பார்க்கும் அஞ்சலி, முன்பு மாதிரி சின்னச்சின்ன கண்டிசன்கள்கூட இப்போது விதிக்காமல், டைரக்டர்கள் சொல்லும் எந்த மாதிரி காட்சிகளாக இருந்தாலும் அவற்றை மறுக்காமல் நடித்துக்கொடுத்து நல்ல பிள்ளை என்ற பெயரையும் எடுத்து வருகிறார்.