'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
வில்லு, போக்கிரி படங்களை அடுத்து பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்கள் அவருக்கு பெரும் தோல்விகளாக அமைந்தன. அதனால், தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்வதில் இறங்கினார். அப்படி அவர் இயக்கிய ரவுடி ரத்தோர், ராமைய்யா வாஸ்தவய்யா ஆகிய இரண்டு படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. ஆனால், அதையடுத்து, மீண்டும் தனது சொந்த கற்பனைகளை படமாக்கிய பிரபுதேவாவுக்கு ஆர். ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன் என்ற இரண்டு படங்களுமே அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படங்கள் தோல்வியடைந்ததால் இந்தியில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பிரபுதேவா திடீரென்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதனால் மீண்டும் தனது கதையையே படமாக்கும் விஷப்பரீட்சை வேண்டாம். வழக்கம்போல் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா.அதன்காரணமாக, தெலுங்கில் சமீபத்தில் வெற்றி பெற்ற சில படங்களை பார்த்து வந்த அவர், தற்போது ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி இயக்கி வெளியான, கோவிந்துடு அந்தாரிவாடெலே என்ற படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதையடுத்து, பாலிவுட்டின் சில மெகா ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வரும் பிரபுதேவா, அந்த படத்தில் நடிக்கவும் தனது ஆஸ்தான ஹீரோயினி சோனாக்ஷி சின்ஹாவை ஏற்கனவே புக் பண்ணி வைத்து விடடாராம்.