அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'ஆம்பள' படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை ருசிக்க ஆரம்பித்து விட்டார் ஹன்சிகா. அடுத்தடுத்து இந்த ஆண்டில் ஹன்சிகா நாயகியாக நடிக்கும் நான்கைந்து படங்களாக கண்டிப்பாக வெளிவரும். அடுத்த வெளியீடுகளாக “வாலு, உயிரே உயிரே, ரோமியோ ஜுலியட்” ஆகிய படங்களும் அதற்குப் பிறகு 'புலி', படமும் ஹன்சிகா நடித்து வெளிவர உள்ளன.
'ஆம்பள' படம் வெளியான முதல் நாளிலேயே வெற்றி என்ற செய்தி பரவி வருவதால் ஹன்சிகா தொடர்ந்து ராசியான நடிகையாகவே தமிழ்த் திரையுலகில் வலம் வருவார் என்று நம்பலாம். தமிழில் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளதால் சமீபத்தில் ஹிந்திப் படம் ஒன்றில் நாயகியாக நடித்த வாய்ப்பைக் கூட ஹன்சிகா ஏற்கவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் ஹன்சிகாவின் திரையுலக வாழ்க்கை குழந்தை நட்சத்திரமாக ஹிந்திப் படங்களில்தான் ஆரம்பமானது.
அதோடு, தன்னை வளர்த்துவிட்ட தெலுங்கில் கூட அவர் வேறு எந்தப் புதுப்படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை. தொடர்ந்து சுந்தர்.சியின் இயக்கத்தில் மூன்று படங்கள் நடித்து முடித்துவிட்டதால், சுந்தர்.சியின் அடுத்த படத்திலும் ஹன்சிகாதான் ஹீரோயினாக இருப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன.
எப்படியோ தமிழ் ரசிகர்களை தவிக்க விடாமல் இருந்தால் சரி...