சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
ரன்பீர் கபூருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த செய்தியை கத்ரீனா கைப் மறுத்துள்ளார். பாலிவுட்டின் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயரை கொண்ட தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் லண்டன் சென்றார் கத்ரீனா. இந்த கொண்டாட்டத்தின் போதே ரன்பீர்-கத்ரீனாவின் நிச்சயமும் ரகசியமாக நடந்ததாக பாலிவுட்டில் செய்தி பரவி கிடக்கிறது. இதனை கத்ரீனா தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து கத்ரீனாவின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளதாவது, லண்டனில் கத்ரீனாவுக்கு ரகசியமாக நிச்சயம் நடந்ததாக வந்த செய்தி உண்மையில்லை, இது வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.