Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

16 ஜன, 2015 - 11:05 IST
எழுத்தின் அளவு:

87வது ஆஸ்கர் விருதுக்கான படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் படம் தேர்வான நிலையில், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் அவரது படம் இடம்பெறவில்லை, இதனால் இந்தாண்டு ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசையால் உலகளவில் பிரபலமான தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஏற்கனவே ''தி ஸ்லம்டாக் மில்லினியர்'' படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.


இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி 22ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக சிறந்த இசையமைப்பிற்கான விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படமும், ரஜினியின் கோச்சடையான் படங்கள் தேர்வாகி இருந்தன. இதனிடையே விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை ரஹ்மான் இழந்துள்ளார்.


தனது பெயர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படாதது பற்றி ரஹ்மான் எந்த கவலையும் படவில்லை. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விருது மீது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் நீண்ட பயணத்தில் இது ஒரு நிறுத்தம் என்று நினைக்கிறேன். கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in