தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு கலைஞர் டி.வியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடனமாடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனபோதும், அப்போதெல்லாம் அவர் தனது உடல் எடையை குறைக்கவில்லை. குஷ்பு மாதிரி குண்டாகத்தான் இருந்தார். அதே உடல்கட்டுடன்தான் அவர்களும் இவர்களும், சட்டப்படி குற்றம், விளையாடவா, அட்டகத்தி படங்கள் வரை நடித்தார்.
ஆனால், அதையடுத்து சில டைரக்டர்கள் உடல் பெருத்திருப்பதை காரணம் காட்டியே மெயின் ஹீரோயின் வேடம் கொடுப்பதற்கு தயங்கி நின்றதால்தான், பின்னர் வாய்ககட்டி வயித்தைக்கட்டி தனது உடல் எடையை குறைத்தாராம். அதற்காக மாதக்கணக்கில் கடின உடற்பயிற்சி செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு நல்ல சாப்பாட்டு பிரியையாம்.
அதனால், தனக்கு பிடித்த உணவுகள் எதையும் சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். முக்கியமாக நான்வெஜ் என்றால் புல் கட்டு கட்டும் அவரால் இப்போது அதை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிகிறதாம். ஏப்பம் விடும் அளவுக்கு சாப்பிட முடியவில்லையாம்,. அப்படி சாப்பிட்டால் மீண்டும் உடம்பு பெருத்து விரிந்து விடும் என்பதால் அடக்கி வாசிக்கிறாராம்.
இதன்காரணமாகவே யாராவது நண்பர்கள் பார்ட்டிகளுக்கு அழைத்தால்கூட அவரால் செல்ல முடியவில்லையாம். அங்கு சென்றால் அனைவரும் சாப்பிடுவதைப் பார்த்து தானும் புகுந்து விளையாடி விடுவோம் என்பதற்காகவே பார்ட்டிகளை தவிர்த்து விடுகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.