டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"லிங்கா பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது முறையல்ல, என, காரைக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். காரைக்குடியில் கட்சி சார்பில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் சரத்குமார், மகளிர் அணி செயலாளர் ராதிகா ஆகியோர் துவக்கி வைத்தனர். சரத்குமார் கூறியதாவது: தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதை மிருக வதை தடை சட்டத்தின் கீழ் சேர்ப்பது தவறு. அமெரிக்காவில் காளையை வைத்து விளையாடுகின்றனர்.
"லிங்கா பட நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பு அல்ல. நடிப்புடன் நடிகரின் பணி முடிந்துவிடும். தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தால் அது தொழில் செய்வோரை மட்டுமே சாரும். இலங்கையில் ஆட்சி மாற்றம் வரவேற்க தக்கது தான், என்றார்.