டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C's என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு BR ரெஜின் இசையமைத்துள்ளார். 'காதல் கனிரசம்' என்ற பாடல் அதன் வித்தியாசமான இசையால் அனைவரையும் ஈர்த்துள்ளது. “படத்தில் வரும் கனவு - டூயட் ஆக வரும் பாடலுக்கு அறுபதுகளில் வெளிவந்த பாடலை ரீமிக்ஸ் செய்யலாம் என்று இயக்குனர் கூறினார். அதே பாணியில், அதே இனிமையுடன் நான் புதிதாக இசையமைத்து தருகிறேன் என்றேன்.” என்று கூறினார் இசையமைப்பாளராக அறிமுகமாகும் BR ரெஜின். “வைர பாரதி எழுதியுள்ள டூயட் பாடலை MM மது மற்றும் ஸ்ருதி ஆகியோர் பாடியுள்ளனர். பாடலில் பழைய பாடல்களில் வரும் வார்த்தைகளே உபயோகித்துள்ளோம். பாடலின் ராப் பகுதியை அதே அறுபதுகளின் தொனியில் அமைத்துள்ளோம்.” என்கிறார் ரெஜின். “'காதல் கனிரசம்' பாட்டிற்கு ரசிகர்கள் தங்கள் கற்பனையில் வரும் நடன அசைவுகள் மற்றும் காட்சிகளை பதிவு செய்து அனுப்பலாம் . ஒரு நிமிடம் அல்லது அதற்கும் மேல் நீளமுள்ள வீடியோ பதிவை அனுப்ப வேண்டும். தேர்ந்து எடுக்கப்படும் ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.” என்றார் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.