பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு ஆந்திராவிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. நேரடி தெலுங்குப் படங்களுக்கு நிகராக தமிழ்ப்பட ஹீரோக்களின் தெலுங்குப் பதிப்பு படங்களையும் ஆந்திர ரசிகர்கள் ரசிக்கிறார்கள். எனவே தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்குப்பதிப்பையும் வெளியிட வேண்டும் என்பதில் நம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அஜித் நடித்த ஆரம்பம், வீரம் போன்ற படங்கள் தமிழில் வெளியாகி ஒரு சில நாட்கள் கழித்தே தெலுங்கில் வெளியானது. ஆனால் அஜித், கௌதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள என்னை அறிந்தால் படத்தை தமிழில் வெளியாகும் ஜனவரி 29 ஆம் தேதி அன்றே தெலுங்கிலும் வெளியிட தீர்மானித்துள்ளனர். என்னை அறிந்தால் படத்தின் தயாரிப்பாளராக ஏ.எம்.ரத்னத்துக்கு தெலுங்குப்படத்துறையில் நெட்வொர்க் இருப்பதால் என்னை அறிந்தால் படத்தை ஆந்திராவில் புரொமோஷன் செய்யும் வேலைகளை துவங்கிவிட்டார். என்னை அறிந்தால் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் வெளியாக இருப்பதால் தெலுங்கு பதிப்பின் வேலைகளும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.