Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் முளைத்த வாலு!

14 ஜன, 2015 - 12:24 IST
எழுத்தின் அளவு:

சிம்பு நடித்த படங்கள் எப்போது வெளியாகும் என்று அவருக்கு மட்டுமல்ல, கடவுளுக்கே தெரியாது என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் உள்ளது.


அவர் நடித்த படங்கள் வெளியாகி வெகு காலம் ஆகிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த வேட்டை மன்னன் என்ற படம் சில மாதங்களுக்கு முன் ட்ராப் செய்யப்பட்டது. சிம்பு நடித்து வந்த மற்றொரு படமான 'வாலு' படமும் மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.


நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்புவுடன் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், வி.டி.வி.கணேஷ் முதலானோர் நடித்துள்ளனர்.


இந்தப்படத்தையும் ஒழுங்காக சிம்பு முடித்துக்கொடுக்கவில்லை. எனவே வாலு படத்தையும் ட்ராப் பண்ணிவிட தயாரிப்பாளர் தீர்மானித்துவிட்டார் என்றும், வாலு படத்தை இயக்கும் விஜய் சந்தர் என்ற புதுமுக இயக்குநர் மனம் வெறுத்துப்போய் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் வாலு படம் ட்ராப்பாகவில்லை, விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


வாலு படத்தை விரைவில் ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனராம்.


பொங்கல் முடிந்ததும் வாலு படத்தை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர் என்றும், சென்சார் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல் அடிபடுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in