ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அவ்வபோது பரிசோதனை முயற்சிகளில் மலையாள சினிமா இறங்குவது வழக்கமான ஒன்றுதான். '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்திலும் அப்படி ஒரு முயற்சிதான் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.. இந்தப்படத்தில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு படத்தில் பெயரே கிடையாதாம். இந்தப்படத்தை இயக்குவதன் மூலம், அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ளார் ஜென்யூஸ் முகம்மது. இவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள இயக்குனரான கமலின் மகன் தான்.
தற்போது இந்தப்படம் பாதியில் நிற்பதாகவும் அல்லது கைவிடப்பட்டுவிட்டதாகவும் சிலர் வதந்திகளை பரப்பிவர இந்த செய்தி துல்கர் சல்மானின் காதுகளுக்கு சென்றுள்ளது. “சில இணையதளங்கள் தான், தாங்களாகவே இப்படி சில கற்பனை கதைகளை உருவாக்கி பரப்பிவருகின்றன. இந்தப்படம் இரண்டு ஷெட்யூலாக பிரிக்கப்பட்டு முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் இந்த ஜனவரியிலேயே துவங்க இருக்கிறது. மற்றவர்கள் சொல்வதுபோல இந்தப்படத்திற்கு பட்ஜெட் பிரச்சனையோ, அல்லது சமீபத்தில் வெளியான மற்றெந்த படங்களின் சாயலோ துளியும் இல்லை என்பதுதான் உண்மை” என தனது முகநூலில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் துல்கர் சல்மான்.