இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ஐ' திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை 'ஆ.....' என ஆச்சரியப்பட வைத்துள்ளது. படத்தை வெளிநாடுகளில் பார்த்த சிலர் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைவருமே படத்தைப் பற்றி பாராட்டியே எழுதி வருகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தப் படம்தான் மிகவும் பிரம்மாண்டமானது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. படத்திற்காக விக்ரமிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். அதிலும், கூன் விழுந்த கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு மிரட்டலாக உள்ளது என்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் சந்தானத்தின் காமெடி களை கட்டுகிறதாம். இந்தியத் திரையுலகத்தில் இப்படி ஒரு திரைப்படத்தை இதுவரை யாரும் பார்த்த்தில்லை என்றே கருத்தே அதிகமாக நிலவுகிறது.
காதல், ஆக்ஷன் இரண்டும் படத்தில் வேறு ஒரு தளத்தில் உள்ளதாம். விக்ரமின் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான நடிப்பை வேறு எந்த நடிகரும் இதுவரை அளித்ததில்லை என்கிறார்கள். எமி ஜாக்சனை எந்த அளவிற்கு அழகாக காட்ட முடியுமோ அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் அருமையான பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான ஒளிப்பதிவு இரண்டுமே ஷங்கருக்கு இந்தப் படத்தில் மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளதாம்.
'ஐ' முதல் நாளில் மட்டுமல்ல, தொடர்ந்து பல சாதனைகளைப் புரியும் என்பதே திரையரங்குகள் பக்கமிருந்து வரும் செய்தியாக உள்ளது.