தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளையதீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய் அதையடுத்து தான் நடித்த தேவா படத்தில் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு உள்பட 3 பாடல்களை பாடினார். அதற்கடுத்த படமான ரசிகனில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்று பாடியவர் அவ்வப்போது தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து பின்னணி பாடி வந்தார்.
அந்த வகையில், பத்ரியில் என்னோட லைலா, பகவதியில் கோககோலா பாடல்களுக்கு பிறகு ஒரு ஏழு ஆண்டுகளாக பின்னணி பாடுவதை நிறுத்தியிருந்த விஜய், துப்பாக்கியில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு என்ற ஹிட் பாடலை பாடியிருந்தார்.
அதேபோல், தேவர்மகனில் போற்றிப்பாடடி பெண்ணே என்ற பாடலை முதன்முதலாக பாடிய ஸ்ருதிஹாசன், தொடர்ந்து பல பாடியவர், தற்போது ஹீரோயினியான பிறகும் பல மொழிகளிலும் பின்னணி பாடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மான்கராத்தேயில் உன் விழிகளில், என்னமோ ஏதோ படத்தில் செட்டப் யுவர் மவுத் போன்ற பாடல்களை பாடியிருந்தார்.