வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
ஒரு தயாரிப்பாளர் தன்படத்தில், நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரியதாகி வரும் இந்தக் காலகட்டத்தில் ஜெய் நடிக்கும் புகழ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத் , ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு வியந்து பாராட்டுகிறார். சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி , வட கறி ஆகிய வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பையன் என புகழப்படும் ஜெய் தற்போது வலியவன் மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
புகழ் படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் கூறியதாவது ஜெயுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமானது.அவருடைய நல்ல கதைக்கான தேடல்,நேரத்தை கடைபிடிக்கும் பாங்கு,எளிமை ஆகியவை மிகவும் முக்கியமான குணங்களாகும்.அவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.வடகறி படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படமாகும். வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற வடகறி நகைச்சுவைக் கலந்த ஒரு த்ரில்லர் படமாகும்.புகழ் பெயருக்கேற்ப பெரும் படமாகும்..NH 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு, புகழ் பெற நாங்கள் எல்லாவிதமான விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். radiance media வருண் மணியனோடு இணைந்து இந்த படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று பெருமையுடன் கூறினார் சுஷாந்த்