ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இங்கிலாந்து நாட்டு நடிகையான எமி ஜாக்சன், இயக்குனர் விஜய்யால் 'மதராசப்பட்டிணம்' படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த நாயகியானார் எமி. தொடர்ந்து தமிழில் அதே விஜய் இயக்கத்தில் 'தாண்டவம்' படத்திலும் நடித்தார். ஹிந்தியில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்திலும், தெலுங்கில் 'எவடு' ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார்.
அவற்றில் 'மதராசப்பட்டிணம்' தவிர வேறு எந்தப் படமும் எமி ஜாக்சனுக்குப் பெரிய வெற்றியாக அமையவில்லை. 'ஐ' படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக தேதிகளை ஒதுக்கியதால் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். 'ஐ' படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் மோதல் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன. அதையும் மீறி, படத்தின் இசை வெளியீட்டிலும், தற்போது படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நிரூபித்து வருகிறார். 'ஐ' படம் தனக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுக்கும் என எமி அதிகம் நம்புகிறாராம்.
அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்திலும், தனுஷுடன் ஒரு படத்திலும் நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளனார். இந்த ஆண்டு முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் நடிகையாகவும் எமி இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.