புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மலையாளத்தில் மினிமம் கியாரண்டியில் படம் தயாரிக்கவேண்டும் என்றால் தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாக இருப்பவர் ஜெயசூர்யா தான்.. வருடத்திற்கு ஆறு படங்களாவது ஜெயசூர்யாவின் பட்டியலில் சேர்ந்துவிடும்.. போனவருடம் அவர் நடிப்பில் வெளியான ஏழு படங்களில் 'அப்போதேகேறி' படம் ஜெயசூர்யாவிடம் ஒளிந்துகிடந்த வித்தியாசமான நடிப்பை வெளிக்கொண்டுவந்தது.
ஜெயசூர்யா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் கூட மிக வித்தியாசமாக 'ஜிலேபி' என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். கடந்த 20௦13ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் ஏற்கனவே ஒருமுறை இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.