தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் நடித்த விஷால், அடுத்து வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டிருந்த சுசீந்திரன்,. தற்போது லொகேஷன்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகளும் நடக்கிறது.
அந்த வகையில், விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஆர்யாவும் ஒரு வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இருபபினும், அந்த படத்தில் நடிப்பது பற்றி ஆர்யா தரப்பு இன்னும் எந்த முடிவும் சொல்லவில்லையாம். ஆனால், அந்த கதையை ரெடி பண்ணியபோதே, விஷாலுடன் ஆர்யா அல்லது பரத்தை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தாராம் சுசீந்திரன்.