ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் 'மவுசு' கூடிக் கொண்டே போகிறது. '3' படத்தில் தனுஷின் நண்பனாக திரையுலகத்தில் அறிமுகமானவர் 'மெரினா' படத்தில் நாயகனாக உயர்ந்து, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் மெகா ஹிட்டைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள நாயகர்களில் தவிர்க்க முடியாத நாயகனாகிவிட்டார். இந்தப் படத்திற்கு முன் வெளிவந்த “மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல்” ஆகிய படங்களும் இவருக்கு வெற்றியைத் தந்தாலும் 'வாலிபர் சங்கம்' இன்றைய வாலிபர்கள் பலரின் மனதில் அழுத்தமாக இடம் பிடிக்க காரணமாக அமைந்துவிட்டது.
கடந்த ஆண்டு ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து 'மான் கராத்தே' படத்தில் பல நடிகர்களையும் பொறமைப்பட வைத்தார். தற்போது இவர் நடித்துள்ள 'காக்கி சட்டை' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. 10ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் இரண்டே நாட்களுக்குள் யு டியூபில் 10 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள்ளாகவே 10 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சிவகார்த்திகேயன் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த 'அனேகன்' திரைப்படத்தின் டிரைலர் கூட இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால்தான் பார்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் 'காக்கி சட்டை' டிரைலர் 'அனேகன்' டிரைலரைக் கூட மிஞ்சி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அனேகன்' படம் அடுத்த மாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'காக்கி சட்டை' படமும் சென்சார் முடிந்து வெளியிடத் தயாராக உள்ளது. அநேகமாக 'அனேகன்' படம் வெளியான பிறகுதான் 'காக்கி சட்டை' வெளிவரும் எனத் தெரிகிறது.