தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அம்புலி 3D, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3D. MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். கோகுல், அஞ்சனா, பேபி ஹம்சிகா நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி, தனது ஜம்போ அனுபவத்தை கூறுகையில் “ இப்படத்தில் வேலை செய்தது பல அருமையான அனுபவங்களை தந்தது. இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்யக்கூடியவர்கள்.
“ படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார். மேலும், அழகிய பேபி ஹம்சிகா, இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.”
“ படத்தின் 90% படப்பிடிப்பு, ஜப்பானின் டோக்கியோ மற்றும் டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ தமிழ் சங்கத்தினர் எங்களை கனிவாய் வரவேற்றனர். ஒரு நாள் தனியாக ஷாப்பிங் சென்றபொழுது ஜப்பானிய மொழியில் எழுதிய விலாசத்தை தொலைத்துவிட்டேன். ஒரு ஜப்பானிய டாக்ஸி ஓட்டுனர் எனக்கு உதவி புரிந்தார். நான் இந்தியாவை சேர்ந்தவள் என்றவுடன் ரஜினிகாந்தை பற்றி பேசினார். தமிழிலும் பேசினார்.”