Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எனக்கு எப்போதும் தனிமை பிடிக்காது : பிபாஷா பாசு

12 ஜன, 2015 - 12:00 IST
எழுத்தின் அளவு:

நான் தற்போது தனிமையில் இல்லை. தனிமையில் இருப்பதை துளிகூட தாம் விரும்புவதில்லை என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கூறியுள்ளார் .




பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை பிபாஷா பாசு என்றால், அது மறுப்பதற்கில்லை. அழகுபதுமையாக விளங்கி வரும் பிபாஷா பாசு, அலோன் என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் சாருலதா மற்றும் மலையாளத்தில் கீதாஞ்சலி படங்களின் ரீமேக் படம் ஆகும். அலோன் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் தனது திரையுலக வாழ்க்கை குறித்து பிபாஷா பாசு, நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்....


மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது


அலோன் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டிரைலருக்கு, ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அபரிமிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் டிரைலருக்கு மட்டுமல்லாது, பாடலுக்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் சிறப்பாக உள்ளது. சமூக வலைத்தளங்களில், டிரைலர் மற்றும் பாடலுக்கும், மில்லியன் ஹிட்ஸ் கிடைத்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கட்ரா மெயின் ஜியுன் மற்றும் ஆவாரா பாடல்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆவாரா பாட்டு, சிறந்த ரொமான்ஸ் பாடல் ஆகும். ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும் போது, தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன்




அலோன் படத்தில், ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான் நடித்துள்ளேன். எனவே, எனக்கு இந்த படத்தில் டபுள் ரோல். இந்தப்படத்தில், எனக்கு சஞ்ஜனா மற்றும் அஞ்ஜனா கேரக்டர்களில் நடித்துள்ளேன். அதில் ஒருகேரக்டர் இறந்துவிடும். மற்றொன்று உயிரோடு இருக்கும். இந்த இரண்டு கேரக்டர்களும், கபீர் என்ற கேரக்டரில் நடித்துள்ள கரன் சிங் குரோவரை காதலிப்பதாக படம் செல்லும். தான் இதுவரை நடித்த படங்களில், இது மிகவும் வித்தியாசமான படம் ஆகும்.




புதுவித நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்




இந்த படத்தில், நான் முதல்முதலாக கோஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளேன். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் ஒன்று கோஸ்ட் கேரக்டர். இரண்டு கேரக்டர்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த படத்தில் நடித்தது, தனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. புதுவிதமான நடிப்பை வெளிப்படுத்த, இந்த படம் தனக்கு வழிவகை செய்து கொடுத்துள்ளது.


கரனின் நடிப்பு பிரமிக்க வைத்தது


கரன் சிங் குரோவர், வெள்ளித்திரைக்கு புதியவர் என்ற தோற்றமே சிறிதும் இல்லாமல், பல படங்களில் நடித்து தேர்ச்சி பெற்றவர் என்று படத்தில், அவரது நடிப்பு இருந்தது. அவரது நடிப்பு, என்னை பல இடங்களில் பிரமிக்க வைத்தது. கரன் சிங் குரோவர், பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகரை காட்டிலும், அவரது அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அலோன் படத்தில், கரனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு படத்தில் தங்கள் திறமைகளை காட்டியுள்ளோம்.


அலோன் - ரொமான்டிக் திகில் படம்


அலோன் படம் வெறும் திகில் படமட்டுமல்லாது, சிறந்த காதல் கதை கொண்ட படம் ஆகும். 2 பெண்களுக்கும், ஒரு ஆணிற்குமிடையே உள்ள காதலை, இப்படம் விவரிக்கிறது. அதற்காக, இதை முக்கோண காதல் கதை என்று கூறிவிடமுடியாது. படத்தின் கதையை, ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால், உணர்ச்சிக்காதலர்கள் மூன்று பேரின் கதை என்று சொல்லலாம்.


எனக்கு எப்போதும் தனிமை பிடிக்காது


தான் நடித்துள்ள படம் பெயர் தான் அலோன். ஆனால், தான் தற்போது தனிமையில் இல்லை. தனிமையில் இருப்பதை துளிகூட தாம் விரும்புவதில்லை. தான் தனிமையை வெறுப்பவள், ஏனென்றால், எனக்கு தனிமை என்றால் மிகவும் பயம். திகில் படங்கள் என்றாலே, நான் பார்ப்பதற்கு மிகவம் பயப்படுவேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தான் நடித்து விரைவில் வெளியாக உள்ள, அலோன் படத்தையும் தான் பார்க்க விரும்பவில்லை என்று பிபாஷா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in