தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பத்திரிகையாளரும், பெண் இயக்குனருமான விஜயபத்மா நர்த்தகி என்ற படத்தை இயக்கினார். இது திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பல விருதுகளை பெற்றது.
தற்போது ராஜ களவு என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்குகிறார். இது 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னன் இன்றைக்கு இருந்தால் அவன் இந்த நாட்டை எப்படி பார்ப்பான் என்கிற கதை. மத கலவரங்களுக்கு எதிரான கதையம்சம் கொண்ட படம். சரித்திர கதையும், நிகழ்கால கதையும் இணைந்த படம். இதில் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், நடன பயிற்சியும் பெற்ற நிரன் விக்டர் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குவ்பலா ஜேக்கப் துனியா என்பவர் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ் மற்றம் ஆங்கிலத்தில் தயாராகிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.