Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாகிஸ்தானிலும் வசூல் சாதனை நிகழ்த்திய பிகே

11 ஜன, 2015 - 17:45 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ள அமீர் கானின், பிகே திரைப்படம், பாகிஸ்தானிலும், வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.


ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிகே. இந்த படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருந்தது. படத்தை தடை செய்ய வேண்டுமென்று யோகா குரு ராம்தேவ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் போர்க்கொடி உயர்த்த, படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்று அரசியல் தலைவர்களான அத்வானி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், திரையுலக நட்சத்திரஙகள் உள்ளிட்டோரும் படத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.


பிகே படம், இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து, உள்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. அதறகு பிறகு வெளியான படங்கள், சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் சிறப்பாக இல்லாததால், பிகே படத்தின் வசூல், மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் வசூல் சாதனை நிகழ்த்திய பிகே படம், அண்டை நாடான பாகிஸ்தானிலும், வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.


இதுதொடர்பாக, பிவிடி லிமிடெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹாசன் ரிஜ்வி, டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, பிகே படம், வலுவான செய்தியை கூறியுள்ளது. இதன்காரணமாக, பலரும் படத்தை தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர். பாகிஸ்தானில், இதுவரை, பிகே படம், ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளதாக ரிஜ்வி அதில் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தானில் "வார்" என்ற திரைப்படம், ரூ.22 கோடி என்ற அளவில் வசூல் ஈட்டியுள்ளது. இதுவே, அங்கு சாதனையாக உள்ளது. இந்நிலையில், வார் படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், பிகே படம், தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. ரூ. 15 கோடியாக இருந்த பிகே படத்தின் வசூல், கடந்த 4 நாட்களில் மட்டும், ரூ. 3 கோடி அதிகரித்துள்ளது. விரைவில், வார் படத்தின் வசூல் சாதனையை, பிகே படம் முறியடிக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in