பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'லிங்கா' பட நஷ்டம் தொடர்பான பிரச்சனையில் ரஜினிகாந்த் தலையிடக் கோரி வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தற்போது சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 'லிங்கா' பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவில்லை என்றால் வரும் பொங்கலன்று 'லிங்கா' படம் திரையிடப்பட்ட சுமார் 600 திரையரங்குகள், ஒரு நாள் அடைப்பு செய்ய சம்பந்தப்பட்ட போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் பொங்கலுக்கு வெளிவர உள்ள புதிய படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. “ஐ, ஆம்பள, டார்லிங்” ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளிவர உள்ளதால் அந்தப் படங்களைக் காண முடியாமல் ரசிகர்கள் தவிக்கும் நிலையும் ஏற்படும். இதனால் சுமார் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதோடு, அரசாங்கத்திற்கும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
ரஜினிகாந்த் மற்றும் 'லிங்கா' குழுவினர் நஷ்டத்தை சரி செய்யத் தவறும் பட்சத்தில் மேற்கண்ட முடிவை இன்று மாலைக்குள் அறிவிக்க போராட்டக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.