டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தர்மத்தின் தலைவன், சின்ன தம்பி , கிழக்கு கரை, பாண்டித்துரை என பல படங்களில் பிரபு-குஷ்பு ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு காதல், கல்யாணம் என சில சர்ச்சைகளால் அவர்கள் இணையவில்லை. அப்படியே நடிக்கும் வாயப்புகள் வந்தாலும், அவர்கள் அதை ஏற்காமல் மறுத்து வந்தனர். ஆனால், பல ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது வந்தாள் என்ற படத்தில் பிரபு-குஷ்பு இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அதோடு, இநத படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகயிருக்கிறது.
அப்படக்குழுவினரிடம், வந்தாள் படத்தில் பிரபு, குஷ்பு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்களா? இல்லையே தனித்தனியாக நடித்துள்ளார்களா? என்று கேட்டால், அது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் எங்கள் படத்தில் இணைந்து நடித்திருப்பதே பெரிய விசயம். அதன்காரணமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படும் என்பதோடு அவர்கள் எந்த மாதிரியான ரோல்களில் நடித்திருக்கிறார்கள் என்பதை காணவே தியேட்டர்களுக்கு வருவார்கள். அதை இப்போதே சொல்லிவிட்டால் எதிர்பார்ப்பு போய் விடும் என்று சஸ்பென்சை உடைக்க மறுக்கிறார்கள்.