பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விஷால் தனது 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்' சார்பில் தயாரித்து நடித்துள்ள நான்காவது படம் 'ஆம்பள'. சுந்தர்.சி. இயக்கியுள்ள ஆம்பள படம் தமிழகத்தில் வெளியாகும் அதே தினத்தில் கேரளாவிலும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்திக் கொண்ட விஷால் அடுத்து குறிவைத்தது கேரளாவை. எனவே தான் நடிக்கும் படங்களை கேரளாவில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதன் புரமோஷன்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் விஷால். நேற்று கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்த 'ஆம்பள' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஷால்.
'தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான என்னோட 'பூஜை' படம் இங்கு 2.7 கோடி ரூபாய் வசூலித்தது. இது எனக்கு கேரள ரசிகர்களின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்று அங்கு நடந்த பிரஸ்மீட்டில் பேசி உள்ளார் விஷால்!
கேரளாவில் விஷாலின் 'பூஜை' படம் ஈட்டிய வசூலை விட விஷாலின் 'ஆம்பள' வசூல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஆம்பள படத்தை கேரளத்தில் திரையிடும் விநியோகஸ்தர்கள்.