பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் இசையில் மட்டுமல்ல வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. இருவருமே இசையமைப்பாளராவதற்கு முன்பு பிரபல இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் பிளேயராக பணியாற்றியவர்கள். இசையமைப்பாளரான பிறகு இருவருமே, ஒவ்வொரு படத்தின் பாடல்களை உருவாக்குவதற்கும் நிறைய நேரங்கள் எடுத்துக்கொள்வார்கள். அதோடு இருவருமே ஜனவரி மாதம் பிறந்தவர்கள். ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி 6 ஆம் தேத பிறந்தவர். ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்ததோ ஜனவரி 8 ஆம் தேதி.
2001ஆம் ஆண்டு 'மின்னலே' படத்தின் மூலம் கௌதம் மேனனால் திரையுலகில் அறிமுகமான ஹாரிஸ் இந்த 2015ஆம் ஆண்டின் முதல் ஆல்பமாக கௌதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தின் பாடல்களைத் தந்திருக்கிறார். தனது 14 வருட சினிமா பயணத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தந்திருப்பது 40க்கும் குறைவான ஆல்பங்கள்தான். இதில் அச்சர்யமான விஷயம்..அவற்றில் 25க்கும் மேற்பட்ட ஆல்பங்கள் சூப்பர்ஹிட்டானவை. இதுவே ஹாரிஸின் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.