கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள பிகே படம், பாராட்டுகளுக்கு நிகராக எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. அத்வானி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்தி்ர பட்னாவிஸ், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களே படத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் சில அமைப்புகள், படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வருகின்றன. பிகே படத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுவோர் பட்டியலில், தற்போது ஷாரூக் கானும் இணைந்துள்ளார். இதுகுறித்து ஷாரூக் கான் கூறியதாவது, சென்சார் போர்டு சான்றளித்தபிறகு அந்த படம் குறித்து கருத்து தெரிவிப்பது தேவையற்றது. தரமான படம் என்பதற்காகவே, யு சான்றிதழை, சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இதற்கு மேலும் படம் குறித்து விவாதிப்பது, அந்த அமைப்பையே இழிவுபடுத்தும் செயலாக நான் கருதுகிறேன். படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அந்த படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்ளை தெரிவித்துக்கொள்வதாக ஷாரூக் கான் கூறியுள்ளார்.