சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
மலையாளத்தில் பல படங்களில் பின்னணி பாடியுள்ள ரம்யா நம்பீசன், தமிழில் பாண்டியநாடு படத்தில்தான் இமான் இசையில் பை பை பை என்ற பாடலை முதன்முறையாக பாடினார். ஆனால் அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டதால், அதையடுத்து, தான் நடித்த டமால் டுமீல் படத்தில் போகாதே போகாதே என்றொரு சோகப்பாடலை பாடினார். அந்த பாடலும் படம் வெளியான நேரத்தில் ஹிட்டானது.
அதையடுத்து, நந்தா நடித்துள்ள கதம் கதம் படத்தில் பாட்டி சுட்ட வடை என்ற கதையை பாடலாகவே பாடியிருக்கிறார் ரம்யா நம்பீசன். அந்த படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது வத்திக்குச்சி பட நாயகன் திலீபன் நடித்துவரும் குத்தூசி என்ற படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ரம்யா.