பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் காவலன், கந்தா படங்களில் நடித்தவர் மித்ரா குரியன். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது உடன் சென்ற கொச்சியைச் சேர்ந்த இசை கலைஞர் வில்லியம்சுக்கும், மித்ராவுக்கும் காதல் உண்டானது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். மித்ராவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் இந்த காதலுக்கு மித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மித்ராவிற்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததும், காதலுக்கு பச்சை கொடி காட்டி கல்யாணத்துக்கும் ஓகே சொல்லிவிட்டனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 17ந் தேதி கொச்சியில் நடக்கிறது. 26ந் தேதி காலை 10 மணிக்கு திருச்சூரில் உள்ள புனித ஆண்டவர் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கொச்சி விமான நிலைய ஆபீசர் காலனியில் உள்ள கலையரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினரும் கலந்து கொள்கிறார்கள்.