'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
சினிமா ஆசை டாக்டர்கள், வக்கீல்கள், ஜோதிடர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. அதேபோல என்ஜினீயர்களையும் விட்டு வைக்கவில்லை. என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐ.டி கம்பெனியில் நல்ல வேலையில் இருந்த கோயம்புத்தூர் கணேஷ் பிரசாத்துக்கு அஜீத் மாதிரி பெரிய நடிகராகணும்னு கனவு வந்துச்சாம். வேலையை தூக்கி போட்டுவிட்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், ஸ்டூடியோ 9 நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்தார். வேலை செய்து கொண்டே வாய்ப்பு தேடியதற்கு பலன் கிடைத்தது.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா படத்தில் ஹீரோவாகி விட்டார். இது அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன், ஜான் விஜய் நடிக்கும் காமெடி படம். அடுத்து கரையோரம் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இனியா ஜோடி. தற்காப்பு என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படியாக தனது அஜீத் கனவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் கணேஷ் பிரசாத். சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா...!