ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷாரூக் கானின் நெருங்கிய நண்பராக இருந்த அர்ஜூன் கபூர், இடையே, சல்மான் கானிடம் ஏற்பட்ட திடீர் நட்பால், ஷாரூக்கிடம் இருந்து அர்ஜூன் விலகினார். பின் சல்மானும், அர்ஜூனும் இணைபிரியா நண்பர்களாக இருந்தனர். சமீபத்தில், நடந்து முடிந்த சல்மானின் தங்கை திருமண நிகழ்ச்சியில், ஷாரூக்கும், சல்மானும் ஒரே வீட்டினர் போல சேர்ந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர். இதனிடையே, விரைவில் வெளியாக உள்ள ராய் படத்தின் படக்குழு, புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது. அந்நிகழ்ச்சியை, சல்மான் கான் வழிநடத்தினார். ராய் படத்தில் நடித்த ஜாக்குலின் பெர்னான்டசுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த சல்மான், அர்ஜூன் கபூரிடம் பேசுவதை தவிர்த்தார். ரெக்கார்டிங்கிற்காக மட்டுமே, சல்மான், அர்ஜூனிடம் சிறிதுநேரம் பேசினார். இதையறிந்த பலர், அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.