ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அம்புலி 3டி, ஆ படங்களை இயக்கிய ஹரீஷ், ஹரி இரட்டையர்கள் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஜம்போ 3டி. இது ஜப்பானில் நடக்கும் கதை. இதற்கு பெண் இசை அமைப்பாளர் ஸ்ரீவித்யா இசை அமைக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சொந்த ஊர் கும்பகோணம். இசை பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் எனக்கு இசை ஆர்வம் இருந்தது. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். இசை தொடர்பாகவே படித்து எம்பில் பட்டம் பெற்றேன். சென்னையில் படித்துக் கொண்டிருக்கும்போது மலேசிய வாசுதேவன் சார் மூலம் இளையராஜா சார் அறிமுகம் கிடைத்துது. அவரது குழுவில் இணைந்து கோரஸ் பாடினேன், டிராக் பாடினேன். பல முன்னணி இசை அமைப்பாளர்களுக்கு உதவியாளராக பணியாற்றினேன்.
ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற "ஒவ்வொரு பூக்களுமே பாடலை..." நான்தான் முதலில் பாடினேன். ஆனால் பின்னர் அதனை சித்ராவை வைத்து பாட வைத்தார்கள். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. நாமும் இசை அமைப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடினேன். என்னை பிடிச்சிருக்கா என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானேன்.
அம்புலி 3டி படத்தின் தயாரிப்பாளர் ஹரி நாராயணன் என்னுடன் படித்தவர். அவர் எனக்கு இந்த வாய்ப்பபை தந்திருக்கிறார். ஜப்பானில் நடக்கும் கதை என்பதால் பின்னணி இசை சவாலாக இருந்தது, விதவிதமான ஸ்டைலில் 5 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் வெற்றி பெறுவேன். என்கிறார் ஸ்ரீவித்யா.