Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கனவுலக கலைஞன் - 'கப்பல்' இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ்

04 ஜன, 2015 - 14:57 IST
எழுத்தின் அளவு:

பிரமாண்டத்தின் அடையாள இயக்குநர் ஷங்கரிடம், கடந்த 9 ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்துவிட்டு, மிகவும் எளிமையான, இனிமையான, 'கப்பல்' திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார், கார்த்திக் ஜி.கிரிஷ். ரசிகர்களை, சிரிப்பு மழையில் நனைத்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற அவரிடம், முதல் படம் இயக்கிய பதற்றமும்... பரவசமும்!



''பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி, திரைப்படக் கல்லுாரியில படிச்சிட்டிருந்தேன். அப்போ, இயக்குனர் ஷங்கரோட சிவாஜி படத்துக்கு, 'உதவி இயக்குனர்கள் தேவை'ங்கற செய்தி கிடைச்சது. நேர்முகத்தேர்வுல, சினிமா சம்பந்தப்பட்ட பல கேள்விகளை ஷங்கர் சார் கேட்டாரு; கூடவே, ஒரு கதையோட முதல் பாதியை சொல்லி, அதோட முடிவை எழுதிட்டு வரச் சொன்னாரு! நான் எழுதின முடிவு அவருக்குப் பிடிச்சுப் போனதால, எனக்கு வாய்ப்பு கிடைச்சது!''


ஒரு படம் இயக்குறதுக்கு, 9 ஆண்டுகள் உதவி இயக்குனரா வேலை பார்க்கணுமா என்ன?


''அப்படி இல்ல... முதன்முறையா படம் பண்ணும்போது, நம்மளை நம்பி பணம் போட தயங்குவாங்க. நானும், பல வருடங்களா முயற்சி பண்ணிட்டுதான் இருந்தேன். அந்தசமயத்துல தான், என் நண்பர்கள், 'நாங்க படம் தயாரிக்கிறதா இருக்கோம். 10 கோடி ரூபாய்ல படம் எடுக்கிற மாதிரி கதை இருக்கா?'ன்னு கேட்டாங்க. உடனே, 'கப்பல்' கிளம்பிடுச்சு!''


ரொம்ப சீரியஸான, வித்தியாசமான படங்கள் இயக்குபவர் ஷங்கர். நீங்க 'காமெடி டிராக்' தேர்ந்தெடுக்க காரணம்?


''நானும் முதல்ல ஒரு சயின்ஸ் பிக் ஷன் கதைதான் எழுதுனேன். ஆனா, அதோட பட்ஜெட் 20 கோடி. அந்த பட்ஜெட்டுக்கு போறதுக்கு முன்னாடி, என்னை ஒரு இயக்குனரா ப்ரூவ் பண்றதுக்கான முயற்சிதான் இந்த 'கப்பல்'. அதுமட்டுமில்லாம, குறைந்த பட்ஜெட்ல எடுத்தாலும், ரசிகர்களை இரண்டு மணி நேரம் சந்தோஷமா வைச்சுக்க சரியான சாய்ஸ் 'காமெடி'தான்ங்கறது என்னோட நம்பிக்கை!''


'கப்பல்' வைபவ், 'மவுன ராகம்' கார்த்திக் மாதிரின்னு சொல்லியிருந்தீங்களே...


'''மவுன ராகம்' கார்த்திக்கிட்டே இருந்த துறுதுறுப்பு, அந்தகாலத்துல பாக்யராஜ் சார்கிட்ட இருந்த திருட்டுமுழி, இரண்டும் கலந்த ஒரு துள்ளலான கேரக்டர்தான் 'கப்பல்' வாசு. அதை, வைபவ் இன்னும் சிறப்பா மெருகேத்துனதால அப்படி சொன்னேன்! நான் சொன்னது உண்மைன்னு, வைபவ் நிரூபிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!''


'கப்பல்' அனுபவம் எப்படி?


''ஹீரோயினுக்கு தமிழ் தெரியாதுங்கற ஒரு பிரச்னையைத் தவிர, ஒரு சுகமான, 'கப்பல்' பயணமாத்தான் ஷுட்டிங் அமைஞ்சது! அந்த அனுபவத்தை, ரசிகர்களும் இப்போ உணர்றது எங்க உழைப்புக்கான கவுரவம்!''


ஆனா, கப்பல் படத்துல நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறதா விமர்சனங்கள் வருதே...


''இந்திய சினிமாவுக்கு வயசு 100! கிட்டதட்ட எல்லாவிதமான கதைகளும் எடுத்தாச்சு; ஆனா, ரசிகர்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்குறாங்க! அதனால, காதல் கலந்த காமெடி கதை, ஆக்ஷன் கலந்த பிக்ஷன் கதை, அஞ்சு கதைகளை சேர்த்து ஒரே கதைன்னு யோசிக்கிற சூழல் வந்திடுச்சு!


இந்த நிலைமையில, சின்னச்சின்ன 'லாஜிக்' ஓட்டைகளை பெருசு பண்ணக்கூடாது!''


பெரிய பெரிய ஹீரோக்களை இயக்கியவர் ஷங்கர்; உங்க சாய்ஸ்?


''என்னோட கதைக்கு யார் தேவையோ, அந்த அடிப்படையிலதான் நடிகர்களை தேர்ந்தெடுப்பேன். இருந்தாலும், கவுண்டமணி சாரை வைச்சு ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு!''


இயக்குனர் கார்த்திக்கின் உச்சபட்ச கனவு?


'''ஆஸ்கர்' அவார்டு வாங்கணும்''


அண்ணனுக்கு ஒரு 'ஆஸ்கர்' பார்சல்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in