‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகர். அவரது அத்தனை படங்களையும் பார்த்து அதுபற்றி விரிவாக பேசக்கூடியவர். சிவாஜியின் ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாடி வருகிறவர். சிவாஜி நடித்த வியட்நாம்வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு படங்களை நாடகங்களாக நடத்தி வருகிறவர். அவர் சிவாஜியை பற்றி "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. இதன் வெளியீட்டு விழா வருகிற 11ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. பிரபல திரைப்பட நடிகை லட்சுமி வெளியிடுகிறார். விழாவில் பழம்பெரும் நாடக நடிகர் ஏ.ஆர்.எஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ரகுநாத், ஷங்கர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். காந்தி கண்ணதாசன் வரவேற்கிறார், ஓய்.ஜி.மகேந்திரன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.